தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் நான்காண்டுகளாக ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்து ரசிகர்கள் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
இந்த சீரியலில் வெற்றியை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் ராகுல் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய கணவரின் ஆசைக்காக சீரியலில் இருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தினம் தினம் உரையாடி வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்டதற்கு தனக்கு பிடித்த ஹீரோயின் நான்தான் என தெரிவித்துள்ளார்.
