Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி… கலாய்க்கும் நெட்டிசன்கள்

Actress Raai Laxmi stylish pictures

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. இவர் தமிழில் நான் அவன் இல்லை, காஞ்சனா, மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் குடியரசு தினமான நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை இணைத்து சுதந்திர தின விழா என பதிவிட்டிருந்தார். இதனை சமூக வலைத்தள வாசிகள் அவரை கலாய்த்து பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது.

அதன் பிறகு குடியரசு தின விழா என அதனை மாற்றி பதிவிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)