தமிழ் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வரும் நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. தினேஷ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் விவாகரத்துக்கு விசாரணைக் வந்ததாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இறப்பு வரும்போது இறந்து விட வேண்டும் என நினைப்பவர்களில் நானும் ஒருவர். என்னுடைய வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.
தினேஷ் கோப்பையை வென்று ரட்சிதாவிடம் கொடுக்க வேண்டும் என சொல்லி வரும் நிலையில் அவர்களுடைய பெற்றோரும் ரட்சிதாவிற்கு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆகையால் எதுவும் செய்ய முடியாது. அவரால் தினேஷின் 8 வருட வாழ்க்கை வீணாய் போனது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
