Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

Actress Ragini Dwivedi and Sanjjanaa Galrani have been found to have used drugs

போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, 4 மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்தனர்.

இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.