தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது மும்பைக்கு சென்றபின் தமிழ், தெலுங்கு ரசிகர்களை மிஸ் பண்ணுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதாவது தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிகப்படியாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தன்னால் தென்னிந்திய படங்களில் ஒப்பந்தமாக முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு ரசிகர்களை அதிகம் மிஸ் பண்ணுவதாக கூறியிருக்கும் அவர் விரைவில் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.