Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணமா.?? இணையத்தில் வைரலாகும் பதிவு

actress rakul preet singh marriage news viral update

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது திருமணம் குறித்து வெளியான செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ரகுல் ப்ரீத் சிங் காதலில் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நடிகை ரகுலின் தம்பி அமன்ப்ரீத் கூறியதாக இணையதளத்தில் செய்தி வெளியானது.

தற்போது இது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் வேடிக்கையான பதிலை ரீட்வீட் செய்து இருக்கிறார். அதில் அவர், “அப்படியா சொன்னாய் அமன்? என் திருமணம் எப்போது என்று எனக்கும் சொல்லிவிடு. என் வாழ்வை பற்றி எனக்கே தெரியவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார். இந்த வேடிக்கையான ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில வேகமாக பரவி வருகிறது.