தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.