Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருண் விஜய் நடித்த யானை படம் பார்த்த ரம்பா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

Actress rambha-about-yaanai-movie

தெலுங்கு திரையுலகின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்பா. அஜித், விஜய் சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள ரம்பா இன்று வரை 90’s ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் மீனாவின் கணவர் உயிரிழந்த விஷயம் கேட்டு மீனாவின் வீட்டிற்கு சென்று கடைசி வரை அவருடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ரம்பா தன்னுடைய குடும்பத்துடன் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தை பார்த்து ரசித்துள்ளார். அதன் பின்னர் படம் சூப்பராக இருக்கு, தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் படம் பிடித்திருக்கு என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் நடிக்கும் ஐடியா இருக்கா என கேட்க தற்போது குடும்பத்தோடு சென்னை வந்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்போதைக்கு வேறு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Actress rambha-about-yaanai-movie
Actress rambha-about-yaanai-movie