Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படம் இணையத்தில் வைரல்

actress ramya pandian diwali photos update

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ரம்யா பாண்டியன். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்தும் வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற சுடிதாரில் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.