Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுசுடன் இணையும் நடிகை ராஷ்மிகா மந்தனா புதிய படம்.! வைரலாகும் தகவல்

actress rashmika mandana will be paired in dhanush next film

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது சிறந்த நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இணைந்திருக்கின்றனர். இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 1950 காலகட்ட பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.