Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகாவிற்கு நிச்சயதார்த்தமா? தீயாக பரவும் தகவல்.

actress rashmika-mandanna-vijay-deverakonda-engagment-truth

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஏற்கனவே இந்த ஜோடி டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வேகமாக வைரல் ஆனது. அதன்படி நிச்சயதார்த்தம் குறித்து வைரலாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. “,

actress rashmika-mandanna-vijay-deverakonda-engagment-truth
actress rashmika-mandanna-vijay-deverakonda-engagment-truth