தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சக்க போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமே இல்லாத போது ராஷ்மிகா இதில் ஏன் நடித்தார் என்ற கேள்வி தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து நடிகை ராஷ்மிகா கொடுத்துள்ள விளக்கம் வைரலாகி வருகிறது.
அதில் அவர், வாரிசு படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரியும். கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் விஜய்க்காக மட்டும் தான் நடித்தேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அதன் காரணமாகவே வாரிசு படத்தை ஏற்றுக் கொண்டேன். என வெளிப்படையாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.