Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறு வயது குடும்ப கஷ்டத்தை மனம் உருகி பேசிய ராஷ்மிகா.. வைரலாகும் ஷாக்கிங் அப்டேட்

actress rashmika mandhana latest interview viral update

தென்னிந்திய திரை உலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக மாறி இருக்கும் இவர் புஷ்பா, சீதாராமன் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் அனுபவித்த பண கஷ்டங்கள் குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அப்பேட்டியில் அவர் “என் சிறு வயதில் பெற்றோர் பண நெருக்கடியில் மிகவும் கஷ்டப்பட்டனர். அப்போது அவர்கள் கையில் பணம் இருக்காது. இதனால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. வீட்டுவாடகை கொடுக்கவும் பணம் இன்றி சிரமப்பட்டோம். இருமாதங்களுக்கு ஒரு முறை வீடு மாறும் அளவிற்கு கஷ்ட நிலைமை இருந்தது. பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மைகூட வாங்கி தர இயலவில்லை” என்று உருக்கமாக கூறினார்.

actress rashmika mandhana latest interview viral update
actress rashmika mandhana latest interview viral update