தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது.
தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் பிசியாக நடித்து வரும் இவர் மற்றொரு பக்கம் ரசிகர்களை கவரும்படி போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் விளம்பர புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உற்சாகப்படுத்தி வருவார்.
ஆனால் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிய நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள ராஷ்மிகா அவர்கள் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Actress @iamRashmika vibes to #VaathiComing ahead of #GoodBoy promotions 😍💃🏻 #Beast #Varisu #Vaarasudu #వారసుడు #Thalapathy67 @actorvijay @Jagadishbliss
— Actor Vijay Team (@ActorVijayTeam) September 30, 2022