கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். 17வது போட்டியாளராக அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
முதல் வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாரம் நிச்சயம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா, ஷிவானி, சம்யுக்தா, கேப்ரியல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் இருந்து ரேகா வெளியேற்றப்பட்டார். ரேகா வெளியேற்றப் படுகிறார் என கமல் அறிவித்ததும் இதர போட்டியாளர்கள் கண்கலங்கினர்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகை ரேகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவில், தான் ஷிவானி மற்றும் பாலாஜியை மிகவும் மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார். ரேகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்லுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.