Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாய் பல்லவி நடிக்கும் “கார்க்கி” படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட படகுழு..வைரலாகும் போஸ்டர்

Actress sai pallavi-movie-update

“பிரேமம்” என்னும் மலையாள படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் அவர் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் என்று கூறலாம்.

திரையரங்கில் வெளியாக இருக்கும் சாய் பல்லவியின் “கார்க்கி” திரைப்படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்.
சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘ஷியாம் சிங்காராய்’திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று. இதனைத் தொடர்ந்து சாய்பல்லவி நடித்துள்ள படம் தான் “கார்கி”. இப்படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் வழங்கியுள்ளனர்.

தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் சாய்பல்லவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானதை தொடர்ந்து.
இப்படத்திற்கான போஸ்டரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இவையனைத்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் தற்போது இப்படத்திற்கான ரிலீஸ் தேதியை பட குழு அறிவித்துள்ளது. அதாவது இந்த “கார்க்கி” திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. இதனால் சாய் பல்லவியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

 Actress sai pallavi-movie-update

Actress sai pallavi-movie-update