Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காஷ்மீரில் சாய் பல்லவி. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

actress sai pallavi recent photos update

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு NGK, மாரி 2, கார்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தெலுங்கு திரை உலகில் பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் SK21 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்கு சென்று இருக்கிறார். அங்கு இயற்கை நிறைந்த இடங்களில் இயற்கையான அழகுடன் அவர் எடுத்திருக்கும் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.