மலையாளத் திரையுலகில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய்பல்லவி. தமிழ் பெண்ணாக இருந்தாலும் மலையாள படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் பதிந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய ரசிகர் ஒருவர் தன்னுடைய மார்பில் சாய் பல்லவியின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளார். இவர் சாய்பல்லவியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.