“பிரேமம்” என்னும் மலையாள படம் மூலம் அனைவருக்கும் மலர் டீச்சராக பரிச்சயமானவர் சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் சாய்பல்லவியின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாலமே இருக்கிறார்கள் என்று கூறலாம்.
சமீபத்தில் சாய்பல்லவி நடித்து தெலுங்கில் வெளியான “ஷாம் சிங்காராய்” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் ஜூலை 15ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “கார்கி”.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பிசியாக இருக்கும் சாய்பல்லவி அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். பின்னர் தொகுப்பாளர் ஒரு விவகாரமான கேள்வியையும் கேட்டுள்ளார். அதாவது நீங்கள் அறிமுகமானது மலையாள சினிமாவில் ஆதலால் உங்களது தாய்மொழி என்னவென்று கேட்டிருக்கிறார்.
தயங்காமல் சாய்பல்லவி நான் கொடைக்கானல், கோத்தகிரி அருகில் உள்ள படுவா என்னும் கிராமத்தில் பிறந்த பெண். அது தமிழகத்தில் தான் உள்ளது அதனால் தமிழகம் தான் எனது பூர்வீகம், தமிழ் தான் என் தாய்மொழி என்று அசராமல் பதில் அளித்திருக்கிறார். இதனை ரசிகர்கள் செம்ம பதில் என்று பாராட்டி வருகின்றனர்.