தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் கொடி கட்டி பறந்து வரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
உடல் நிலை முடியாத நிலையிலும் அதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷி படத்தின் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தாவை அலேக்காக தூக்கி ரொமான்ஸ் செய்கிறார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.
View this post on Instagram