Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தா உடல்நிலை குறித்து வெளியான வதந்தி.. இணையத்தில் வைரல்

actress samantha health issues rumours viral update

தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி ஹீரோயினியாக இருப்பவர்தான் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிகை சமந்தாவின் உடல் நிலை குறித்து இன்று ஊடகங்களில் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த செய்தியை சமந்தாவின் மேலாளர் முற்றிலும் மறுத்திருக்கிறார். மேலும் அவர் சமந்தா தன்னுடைய வீட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வைரல் தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

actress samantha health issues rumours viral update
actress samantha health issues rumours viral update