தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது இயக்குனர் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதில் அவர், கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர், ரசிகர்ளாகிய நீங்கள் யசோதா டிரைலருக்கு அளித்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கையில் நான் சந்திக்கும் சவால்களை சமாளிக்க வலிமையை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் எனக்கு மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.
முழுமையாக குணமடைந்த பின இதுகுறித்து உங்களிடம் சொல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்சினை குணமாக கூடுதல் காலமாகும். இதனை ஏற்றுகொண்டு நான் அதனுடன் போராடி வருகிறேன். விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு. இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார். இந்த அதிர்ச்சி தகவலை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று தேசிய அளவில் #SamanthaRuthPrabhu என்ற ஹாஷ்டேகை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022