தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர் உண்டு. நாயகியாக நடிக்க வரும் முன்னணி நடிகைகள் பெரும்பாலும் எல்லா நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து எளிதில் நடித்து விடுவார்கள்.
அப்படி இருந்தும் ஒரு நடிகை மட்டும் அஜித், ரஜினி மற்றும் கமல் என மூன்று பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் யார் என தெரியுமா? வேறுயாருமில்லை நடிகை சமந்தா தான்.
தமிழ் சினிமாவில் சிறிய நடிகர்கள் முதல் விஜய் சூர்யா தனுஷ் என பெரிய நடிகர்கள் வரை பெரும்பாலும் அனைவருடனும் இணைந்து நடித்துள்ள இவர் இதுவரை அஜித் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் படங்களில் நடிக்கவில்லை. இனியும் வாய்ப்பு வந்தால் நடிப்பாரா அல்லது அதனை நிராகரித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.