Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய முயற்சியில் களம் இறங்கும் சமந்தா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Actress samantha-in horror-film

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர்தான் சமந்தா. இவர் தற்பொழுது விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சிவா நிர்வாணா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசை அமைக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி கொண்டிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமந்தா இப்படத்தை தொடர்ந்து இந்தியிலும் நடிக்க இருக்கிறார்.

அதாவது பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார். அமர்க்கவுசிக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். மேலும் இதற்கான பயிற்சியில் அவர் தீவிரமாக பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சுவாரசியமான தகவலால் ரசிகர்கள் பேயாக சமந்தாவை காண ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 Actress samantha-in horror-film

Actress samantha-in horror-film