Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது”.: சமந்தா உருக்கம்

actress samantha latest insta post update

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் போது நடந்த நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோயின் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி படுத்தினார். அதன் பிறகு அதற்காக தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக கூறி மீண்டும் பழையபடி உத்வேகமாக படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளதை நினைவுபடுத்தி உருக்கமான பதிவுடன் தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர், மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தேன். ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் கேட்டு அல்ல, வலிமையையும், அமைதியையும் கொடுக்க வேண்டினேன். எதுவும் நாம் நினைத்தது போல் நடக்காது என்பதை இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது என்று குறிப்பிட்டு சர்ச்சில் இருக்கும் புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.