தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. புஷ்பா திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமான இவர் பல மொழிகளில் உள்ள படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்த சமந்தா திடீரென்று உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இணையதள பக்கத்திலிருந்து சற்று விலையில் இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்திருக்கிறார். அதில் அவர் “நீங்கள் எப்போதும் தனியாக செல்ல முடியாது” என்று ஆங்கில வாசகம் கொண்டிருக்கும் ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இது உங்களுக்கு தான் என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram