Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னையே கொடுத்து விட்டேன் கந்தனிடம்.., காதல் பட நடிகை போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான காதல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா.

காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக இவர் நடித்திருந்தார். முருக பக்தரான சரண்யா தற்போது திருத்தணி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் முடியை காணிக்கையாக கொடுத்து நாக்கில் அலகு குத்தி கொண்டு பால்குடம் எடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.

இந்த வீடியோ குறித்த பதிவில் என்னையே கொடுத்து விட்டேன் கந்தனிடம்.. அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே.. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி என தெரிவித்துள்ளார்.