தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ஷாலினி. விஜய், அஜித், பிரசாந்த், மாதவன் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது அவருடன் காதல் மலர்ந்து அஜித்தை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அஜித் மற்றும் ஷாலினி என இதுவரை எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்து இருக்காத நிலையில் இது உண்மையான கணக்கா? போலி கணக்கா? என ரசிகர்கள் குழம்பினர்.
இப்படியான நிலையில் நடிகையின் ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினியின் கணக்கை பின் தொடர்வது மட்டுமல்லாமல் அவரை இன்ஸ்டாகிராமிற்கு வரவேற்று பதிவு செய்துள்ளார். இதனால் இது ஷாலினி அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ கணக்கு தான், நம்பி ஃபாலோ பண்ணலாம் என பலரும் பாலோ செய்ய தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram