Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓராண்டு லிவிங் டுகெதராக வாழ்ந்தவருடன் தர்பார் பட நடிகை திருமணம்

Actress Shamata Anchan Wedding

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

அப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷமதா அஞ்சன். மும்பையைச் சேர்ந்த இவர் நிறைய விளம்பரப் படங்களில் நடித்து, பின் சினிமாவில் நடிக்க தொடங்கினார்

இந்நிலையில், கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார் ஷமதா அஞ்சான். கடந்த 8-ந் தேதியே இவர்களது திருமணம் நடைபெற்றாலும் கூட, அந்த தகவலை தற்போது தான் சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஷமதா.

கடந்த ஓராண்டாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட புரிதலை தொடர்ந்து தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.