பகல் நிலவு என்ற சீரியலில் மிகவும் அமைதியான பெண்ணாக நடித்தவர் ஷிவானி. அந்த சீரியலுக்கு பின் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் கமிட்டானார்.
இப்போது கூட இரட்டை வேடத்தில் ஒரு சீரியலில் நடித்தார். கடந்த சில மாதங்களாக இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது.
அதோடு இவர் பிக்பாஸ் 4ல் கலந்துகொள்ள இருப்பதாகவும் உறுதியான செய்திகள் வருகின்றன. அண்மையில் இவர் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் என்னால் ஜீரம் செய்ய முடியவில்லை உங்களது வயது 21 என்றால் என கமெண்ட் போட அதற்கு ஷிவானி, Gelusil குடியுங்கள். ஆனால் எனது நிஜ வயது 19 என கூறியுள்ளார்.