மலையாளத் திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதை கொய்தவர் சாய் பல்லவி.
மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் ஆனது. ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியானது பலரும் அதனை பங்கமாக கலாய்த்து வந்தனர். ஸ்ருதிஹாசன் சரியான தேர்வு இல்லை என கூறினர். படம் வெளியான பின்னரும் இதே விமர்சனம் தான் வந்தது.
இப்படியான நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு அந்த கதாபாத்திரம் பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன் ஆனால் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கக் கூடாது. முதல் முறையாக அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற கதாபாத்திரமாக அது எனக்கு அமைந்து விட்டது என கூறியுள்ளார். ஆனாலும் நான் என்னுடைய வேலையை சரியாக செய்தேன் என்றுதான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.