இந்திய திரையுலகில் நடிகை இசைக்கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.
இருவரும் இசைக்கலைஞர்கள் என்பதால் இந்த இசையின் மூலமாகத்தான் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு தற்போது காதலித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசன் எப்போதும் தன்னுடைய வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்து வருகிறார்.
ஸ்ருதிஹாசனுடம் திருமணம் எப்போது?? வில்லங்கமான பதிலை சொன்ன காதலர்
மதுவிற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்ததை வெளிப்படையாக கூறியிருந்தார். அதேபோல் தன்னுடைய காதல் குறித்து வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.
இந்தநிலையில் ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனுவிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு இருவருக்குமிடையேயான உறவுக்கு இசை தான் காரணம். இருவரும் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோல் இருவரும் இணைந்து ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறோம். எங்கள் உறவுக்குள் இருப்பது இதுதான்.
மேலும் நாங்கள் இருவரும் இப்போது தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்து இருக்கோம். ஆகையால் இப்போதைக்கு திருமணம் குறித்து ஐடியா இல்லை என தெரிவித்துள்ளார்.