தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல திறமைகளை கொண்டுள்ள இவர் கோலிவுட் திரை உலகின் உலகநாயகனான கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் அவர். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரைய்யா, சலார், தி ஐ ஆகிய படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இங்கிலீஷ் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த ஸ்ருதிஹாசனுக்கு பிசி எனப்படும் ‘பவர் காரிடர்ஸ்’ இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கியுள்ளார். ஆண்டுதோறும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் இந்த விருது இந்த ஆண்டு ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations my angel @shrutihaasan you worked hard and you deserve it more darling 💞 we are super happy and very very proud of you angel on receiving PC National Achievers award on 17th Jan, 2023 😇❤️ #ShrutiHaasan pic.twitter.com/4rfo7f7YHt
— ❤️ Viji ShrutiHaasan ❤️ (@VijiSrutihaasan) January 18, 2023