தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இல்லத்தரசிகள் மட்டுமே பார்க்கும் சமையல் நிகழ்ச்சியை அனைவரும் ரசிக்கும் வகையில் மாற்றியது இந்த நிகழ்ச்சிதான்.
இந்த முறை 10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகள் என்று பக்காவாக தொடங்கியுள்ளது மூன்றாவது சீசன். இதில் 10 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று உள்ளவர் ஸ்ருதிகா. தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் நடித்தார். ஆனால் நான்கு படங்களும் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் தற்போது இவர் குக்கு வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் நடுவர்கள் கோமாளிகள் என அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பலர் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு ஸ்ருதிகா அனைவருக்கும் விருந்து வைத்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram