தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சினேகா. தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இவர் ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகா இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
குழந்தைகள் பிறந்த பிறகு குண்டாக மாறி இருந்த சினேகா தற்போது உடல் எடையை குறைத்த பிறகு சின்னத்திரை டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் சினேகா இதற்கிடையில் மற்ற நடிகைகளை போல் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘எவர் கிரீன் சினேகா’ என்று அவரது புகைப்படங்களை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram