தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தவர் சோனா. கொஞ்ச காலமாக நடிக்காமல் இருந்து வந்த இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய மாரி சீரியலில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
சீரியலில் நடித்து வந்த இன்னொரு நடிகைக்கும் இவருக்கும் செட்டாகாத காரணத்தினால் சீரியலில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று போட்டோஷூட் செய்தது. அதுக்காக நான் ஆவலாக இருந்தேன். அந்த போட்டோஷூட் வெளிவந்த சமயம் நான் மலேசியாவில் இருந்தேன். அந்த பத்திரிக்கை அங்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் ஆர்வம் தாங்காமல் இந்தியா ஓடி வந்தேன்.
ஆனால் அந்த பத்திரிக்கை எனது கவர்ச்சியான போட்டோவை போட்டு படுத்து கூட சம்பாதிக்கலாம் என்று தலைப்பு கொடுத்து இருந்தனர். அதனை பார்த்ததும் மனசு வலிச்சது என தெரிவித்துள்ளார்.
மேலும் எனக்கு பிரேக்கப் ஆகி விட்டது, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆர்வமாக காத்திருக்கிறேன், ஒரு ஆண் துணை நிச்சயமாக தேவை என தெரிவித்துள்ளார்.