கன்னடத் திரையுலகில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் யாஷ்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த தமிழ் நடிகர் தளபதி விஜய் தான் என கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், பிகில் போன்ற படங்களை திரையரங்குகளில் தான் பார்த்தேன். பீஸ்ட் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.