சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே சின்னத்திரையில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் சீரியலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில் பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தில் பாக்யராஜின் மகனாக நடித்திருந்தவர் வேறு யாரும் இல்லை நடிகை சுஜிதா தான். இந்த விஷயத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல் இவர் வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
