கோபி நயினார் இயக்கிய “அறம்” படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மலையாள நடிகை சுனுலட்சுமி.
அறம் படத்தில் சுனுலட்சுமியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கே உருவான கதாபாத்திரம் போல் சில நேரம் இப்படத்தை பார்க்கும் பொழுது தோன்றும். அப்படி ஒரு நடிப்பு தான்.
ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது “சங்கத் தலைவன்” என்ற படத்தில் கருணாஸ் மனைவி வேடத்தில் நடித்து இருக்கின்றார்.
இதுபற்றி கேட்டதற்கு பதிலளித்த சுனுலட்சுமி:
நான் தமிழில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் என்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நான் நடிக்க வந்து, இத்தனை ஆண்டுகள் ஆகியும் “அறம்” படத்தில் மட்டுமே, நான் அதிகமாக கவனிக்க பட்டிருக்கிறேன்” என்று மனம் குமுற வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.