Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உங்கள் அழகின் ரகசியம் என்ன? ரசிகரின் கேள்விக்கு தமன்னா ஓபன் டாக்

Actress tamanna-shared-our-beauty-secrets

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அண்மையில் தமன்னாவை பற்றி நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தமன்னா எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில்களை பதிவிட்டு வருவார். அதேபோல் தற்போது ஒரு ரசிகர் தமன்னாவிடம் உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

அந்தக் கேள்விக்கு தமன்னா நல்ல ஊட்டச்சத்து, போதுமான ஓய்வு மற்றும் சருமம் பராமரிப்பு போன்ற மூன்று விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதும் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி தமன்னா ஓபனாக பதிவிட்டதை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.