தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. தமிழில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் தமன்னா இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் இடம்பெற்று இருக்கும் “காவாலா” எனும் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். அப்பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாக அப்பாடலில் நடிகை தமன்னா ஆடியுள்ள நடனத்தை பலரும் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளாமரான லுக்கில் இன்று விமான நிலையத்திற்கு சென்றுள்ள தமன்னா அப்போது ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram