தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக தன்னுடைய திருமணத்தை தள்ளிப் போட்டு இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அதற்கு தகுந்த நேரம் இது இல்லை, தற்போது தன்னுடைய கரியரில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார். நடிகை தமன்னா பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
