Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகையின் செயலால் நெகிழ்ச்சியான தமன்னா. வீடியோ வைரல்

actress tamannaah with fans love recent video

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாலிவுடில் லாஸ்ட் ஸ்டோரி 2 என்னும் வெப் தொடரிலும் நடித்து வரும் இவர் இத்தொடர் வரும் ஜூன் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் இதனை புரமோட் செய்யும் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்டிருக்கு வருகை தந்திருந்த தமன்னாவிடம் தீவிர ரசிகை ஒருவர் தனது கையில் தமன்னாவின் முகத்தை டாட்டூ குத்தியிருப்பதைக் காண்பித்து அவரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். மேலும் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த ரசிகை காலில் விழுந்ததால் தமன்னா எமோஷனல் ஆகியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.