சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன் எனும் சென்சேஷன் படத்தை இயக்கியவர், இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ’கொம்பு வச்ச சிங்கம்’ என்ற படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தனது பாணியில் மற்றொரு கிரைம் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்து வெளியான கருப்பன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர்.
எஸ்.ஆர்.பிரபாகரனின் சொந்த நிறுவனமான பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.
Director @DirSRP_Official Production & Directorial Pangajam Dreams Productions – Production No 1 Movie Shoot Kickstarted Today💫
Our @actortanya plays the Lead Role🤗
Follow :@Skgethustudio for #TanyaUpdates#SRPrabhakaranDirNo5 #PangajamDreamsProductions#TanyaRavichandran pic.twitter.com/nsKsNpA0Ja
— SK GETHU STUDIO (@Skgethustudio) October 9, 2020