Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வைரலாகும் திரிஷாவின் சிறுவயது புகைப்படம்

Actress trisha-childhood-photos

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை திரிஷா. இவர் சாமி, குருவி, உனக்கும் எனக்கும், போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது முதன்மை கதாபாத்திரங்களாக தேடி நடித்து வரும் நடிகை திரிஷா சதுரங்க வேட்டை 2, ராங்கி மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியன் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் திரிஷாவை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை திரிஷா தனது தந்தையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.