தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததை தொடர்ந்து தளபதி விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்தார். மேலும் தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மணிரத்தினம் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் 234-வது படமாக உருவாக்கும் இந்த படத்திற்கு தக் லைப் என தலைப்பு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாயகன் கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைந்து குறித்து திரிஷா மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு
View this post on Instagram