தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடந்த 28ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் திரிஷா இரண்டு தினங்களுக்கு முன்பு தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை திரிஷாவின் வீடியோ ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram