தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது படக்குழுவினரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை த்ரிஷா மகிழ்ச்சியுடன் காஷ்மீரில் படக்குழுவினருடன் படகு சவாரி செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை ரசிகர்களும் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
#Leo Shoot diaries! @trishtrashers pic.twitter.com/7N6nsGEScv
— #LeoMovie (@LeoMovieOff) February 19, 2023