Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதலில் அதை நிறுத்து…. யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை

Actress Vanitha advises yashika aannand

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். உயிரிழந்த தனது தோழி குறித்தும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்து சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தாலும், ஏராளமானோர் அவரை திட்டி கமெண்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில், யாஷிகாவுக்கு நடிகை வனிதா கமெண்ட் வாயிலாக அறிவுரை கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “டார்லிங் யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்து இருக்கலாம். அதனால் தான் அதனை விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை முதலில் நிறுத்து.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நீ தெளிவாக இருக்க வேண்டும். நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்” என வனிதா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.