Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பார்ப்பதற்கு அருகதையற்ற நிகழ்ச்சி.. பிக்பாஸ் குறித்து வனிதா விஜயகுமார் போட்ட பதிவு.!

Actress Vanitha Blast Bigg Boss Ultimate Show

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை என கூறினார். இதன் காரணமாகத்தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார் என பரபரப்பை கிளப்பினார்.

இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை, தகாத வார்த்தைகள், ஆபாசம் என பார்ப்பதற்கு தகுதியில்லாத நிகழ்ச்சி ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சி உங்களை கொன்றுவிடும் என பதிவு செய்துள்ளார். ‌

இவருடைய இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.